"2 கோடி பேரிடமிருந்து ரூ.2125 கோடி வசூல்"..நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் | Central Government

Update: 2023-12-13 04:29 GMT

ஆதாருடன் பான் கார்டை இணைக்க இரண்டு கோடி பேரிடமிருந்து, 2 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய நிதிதுறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, 2023 ஜூன் மாதம் வரை நாட்டில் 54 கோடிய 68 லட்சம் பான் கார்டுகள்

ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இவற்றை இணைக்க சுமார் 2 கோடி பேர் ஆயிரம் ரூபாய் செலுத்தி இருப்பதாகவும், இதன் மூலம் 2 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்