உத்தரப்பிரதேசத்தில் கட்டிடப் பணியின்போது திடீரென சுவர் இடிந்து விழுந்து ஏராளமான தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுவர் இடிந்ததில் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் சேதமடைந்தன. இதில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் மேலும் சிலர் புதைந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.