"தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது" - சித்தராமையா அனுப்பிய கடிதம்

Update: 2023-09-14 13:52 GMT

கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால் தமிழகத்திற்குக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த அளவின் படி தற்பொழுது 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட முடியாது என முதல்வர் சித்தராமையா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்... காவிரி நீர் பிடிப்பு அணைகளுக்குக் கடந்த 3 ஆண்டுகளை விட இந்த வருடம் 53 சதவீதம்‌ குறைவான நீர் வரத்து உள்ள காரணமாகவும், கர்நாடகாவுக்கு 106.21 டி எம் சி நீர் தேவையாக உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களில் உள்ள 4 அணைகளில் 53.28 டி எம் சி நீர் மட்டுமே உள்ளதாலும், எவ்வாறு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்... அடுத்த 2 வாரங்களுக்கு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,

கர்நாடக மாநிலம் வறட்சியில் பாதிப்படைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, தமிழகம் வறட்சியால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்து பல காரணங்களை கர்நாடக அரசு முன்வைத்துள்ளது... இதனால் காவிரி ஒழுங்காற்று குழு வழங்கியுள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சித்தராமையா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்