நீல நிற பிரியாணி.. - `இது புதுசா இருக்குண்ணே'

Update: 2024-03-15 02:09 GMT

பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து பிரபலமடைந்த, மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண், தற்போது நீல நிறத்தில் ஸ்பைடர் மேன் பிரியாணி தயாரித்து கவனம் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாத்திரத்தில் உள்ள நீல நிற பிரியாணியின் மீது வெள்ளை நிற வலை போன்ற வடிவங்களால் அலங்கரித்துள்ளார். பிரியாணியை வெளியே எடுக்கும்போது அந்த வலைகளும் சாப்பிடக்கூடியதாக இருப்பதாக விளக்குகிறார். இந்த ஸ்பைடர் மேன் நீல நிற பிரியாணி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்