கெஜ்ரிவாலுக்காக மனு.. ரூ. 1 லட்சம் ஃபைன் விவகாரம்.. கரிசனம் காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம்

Update: 2024-05-27 17:22 GMT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அமைச்சரவை சகாக்களுடன் காணொலியில் கலந்துரையாட அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ரீகாந்த் பிரசாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடி அமைச்சரவை சகாக்களுடன் காணொலியில் கலந்துரையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரர் ஸ்ரீகாந்த் பிரசாந்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையிடம் செலுத்த உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி ஸ்ரீகாந்த் பிரசாத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அவருடைய மன்னிப்பை ஏற்ற உயர்நீதிமன்றம், அவருக்கு விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்