"ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி" - பிரதமர் மோடி
"ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி" - பிரதமர் மோடி
ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்லும் முயற்சியை அரசு எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி சேவை செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிஜிட்டல் வங்கி அலகு அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக, 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, வங்கி அமைப்பை மேம்படுத்தி வலுப்படுத்துவதாகவும், அதிக நிதியை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளை காட்டிலும், இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற, இரவு- பகலாக அரசு உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.