அரபிக் கடலில் இருந்து செங்கடல் நோக்கி சென்ற அமெரிக்க சரக்கு கப்பல் மீது, ஹவுதி அமைப்பினர் ஏவுகனை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏடன் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் கிப்ரால்டர் ஈகிள் என்ற கண்டெய்னர் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஏமனின் ஹவுதி அமைப்பினர் ஏவுகனைகளை ஏவி, கப்பலை தாக்கியுள்ளனர். கப்பலில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், செங்கடல் பகுதியில் படையெடுக்க முயலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது.