கர்நாடகாவில், நிலப்பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில். 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண், சாலையில் கட்டிப் புரண்டு சண்டையிடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் ராம் நகரில், பஞ்சாட்சரி என்ற நபருக்கும், அதே பகுதியை சேர்ந்த மம்தா என்ற பெண்ணுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த மேலும் 2 பெண்களும் சரிமாரியாக தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததை அடுத்து, இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.