மூன்று நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டரெர்ஸ் இந்தியாவுக்கு வருகை
மூன்று நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டரெர்ஸ் இந்தியாவுக்கு வருகை
நேற்று இந்தியா வந்தடைந்த ஐ.நா. பொதுச்செயலாளருக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 நாட்கள் இந்தியாவில் தங்கும் அவர், 2008ம் ஆண்டு தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
பின்ன, ஐநா உடனான இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெறும் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறைக்கான "மிஷன் லைப்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்டனியோ கட்டரெஸ், பிரதமர் மோடியுடன் இணைந்து மிஷன் லைஃப்கான புத்தக தொகுப்பையும், லோகோவையும் வெளியிட உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐ.நா. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற முறையாக ஆண்டனியோ கட்டரெஸ் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
அவரின் இந்திய வருகை அதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.