தெலங்கானா மாநிலம் புவனகிரி பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்காக ஆயிரத்து 350 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட ஆலயமணி கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகி வருகிறது. இதனை நாகர்கோயில் அருகே வட்டவிளை கிராமத்தில் உலோக சிற்பங்கள் தயாரிக்கும் ரமேஷ் என்பவரது தலைமையில் உருவாக்கி வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக நடைபெற்ற இப்பணி ஓரிரு நாளில் முடிவடைய உள்ளதாகவும், இந்த கோயில் மணி இந்திய அளவில் பிரம்மாண்டமாக விளங்கும் என்றும் உலோக சிற்பிகள் தெரிவித்தனர்.