சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.. 10வது நாளாக தொடரும் மீட்பு பணி

Update: 2023-11-21 04:44 GMT

உத்தர்கண்ட்டில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், முழுவீச்சில் தொடர்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையின்

ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 10வது நாளாக நடைபெற்று வருகிறது. 2 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை பகுதியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் மன உறுதியை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக மற்றொரு 6 அங்குல விட்டம் கொண்ட பைப்லைன் அமைக்கும் பணி நிறைவடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக RVNL சார்பில் மற்றொரு செங்குத்து பைப்லைன் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்