கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனதில் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Update: 2022-04-24 13:18 GMT
சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனதில் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

88-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தினார். 
மே மாதம் 3 ஆம் தேதி அட்சய திரிதியையும், பரசுராமரின் ஜெயந்தியும், இதனை அடுத்து புத்த பூர்ணிமையும் வரவிருக்கின்றன என குறிப்பிட்ட அவர், இந்த பண்டிகைகள் புனித தன்மை, கொடை, சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவை என்றார். மேலும், உங்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான மிகப்பிரியமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
தற்போது, இந்தியாவில் அனைத்து மக்களும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையை பயன்படுத்தி வருகின்றனர். 
மார்ச் மாதம் யூபிஐ பணபரிவர்த்தனை 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 
மேலும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கி வருகின்றன. 
தினமும் 20,000 கோடி ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். 
மேலும், ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கைக்கும் நீர் அடிப்படை தேவையாகும். இதுபற்றி நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 
இதனால் நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்