"27 இந்து கோயில்களின் மீது குதுப் மினார்" - விஷ்வ ஹிந்து பரிஷத்

குதுப் மினாரில் பழங்கால கோவில்களை மீண்டும் கட்டி, இந்து மத வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

Update: 2022-04-12 11:47 GMT
குதுப் மினாரில் பழங்கால கோவில்களை மீண்டும் கட்டி, இந்து மத வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள குதுப் மினாரில் உள்ள பழமையான கோயில்களை மீண்டும் கட்டவேண்டும்., அங்கு இந்து மத வழிபாடுகளை மீண்டும் தொடங்கவேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்த விவகாரம், சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பின் நிர்வாகி வினோத் பன்சால், நாங்கள் குதுப் மினாரில் ஆய்வு மேற்கொண்டோம், அங்கு இந்து தெய்வங்களின் நிலையை பார்க்கும் போது இதயத்தை பிளக்கிறது என தெரிவித்தார். மேலும், அங்கிருந்த 27 இந்து கோயில்களை இடித்து அதன் மூலம் பெறப்பட்ட பொருள்களை கொண்டே குதுப் மினார் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யுனெஸ்கோ அங்கிகாரம் பெற்ற,12 ஆம் நூற்றாண்டு நினைவுச் சின்னமான குதுப் மினாரில் வி.ஹெச்.பி தலைவர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்