புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் ஆவேசம் - இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
ஆந்திராவில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சரவையில் பதவி கிடைக்காத எம்எல்ஏக்களின் தொண்டர்கள் ஆவேசம்.
சாலைகளில் அமர்ந்து டயர்களை கொளுத்துவது இருசக்கர வாகனத்தை கொளுத்துவது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு இன்று புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது இதில் பழைய அமைச்சர்கள் உள்பட புதிய எம்எல்ஏக்கள் 25 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் பல மாவட்டங்களில் எதிர்பார்த்த எம்எல்ஏக்களுக்கு பதவி கிடைக்காததால் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் இதனால் நேற்று முதலே தொடர்ந்து சாலைமறியல் டயர்களை எரித்து வருகின்றனர். இதில் என்டிஆர் மாவட்டம் சக்கையா பேட்டை எம்எல்ஏ ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாஸ் ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்களுக்கு கட்சி பதவிகள் அளிக்கப்படும் தமது குறிக்கோள் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.