மீளும் இந்திய பொருளாதாரம் - வீழும் வேலையின்மை விகிதம் - வெளியானது CMIE தரவுகள்
இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்ஆய்வறிக்கை கூறுகிறது. பிப்ரவரியில் 8.1 சதவீதமாக இருந்து வேலையின்மை விகிதம், மார்ச்சில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மாதாந்திர வேலை வாய்ப்புகளுக்கான தரவுகள் கூறுகின்றன. ஏப்ரல் 2இல் வேலையின்மை விகிதம் 7.5 சதவீதமாக மேலும் குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஏப்ரல் 2 நிலவரப்படி, நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதை இது சுட்டிக்காட்டுவதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக ஹரியானாவில் 26.7 சதவீதமாக இருந்தது. கர்னாடகா மற்றும் குஜராத்தில் குறைந்தபட்சமாக 1.8 சதவீதமாக இருந்தது.