தினமும் 10 கி.மீ. வேலைக்கு ஓடியபடி செல்லும் இளைஞர்!

டெல்லிக்கு அருகில் நள்ளிரவில் தினமும்10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியப்படி பணிக்கு செல்லும் இளைஞரின் வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Update: 2022-03-21 08:08 GMT
டெல்லிக்கு அருகில் நள்ளிரவில் தினமும்10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியப்படி பணிக்கு செல்லும் இளைஞரின் வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நொய்டா சாலையில் நள்ளிரவில் முதுகில் பை மட்டிக் கொண்டு 19 வயதுடைய இளைஞர் ஒருவர் ஓடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த திரைப்பட தயாரிப்பாளரும், எழுத்தாளருமான வினோத் கப்ரி, தனது காரை அந்த இளைஞருக்கு அருகில் செலுத்திக் கொண்டே பேசினார். நீண்ட தூரம் ஓடி வருவதால் தானே காரில் அழைத்து செல்வதாக வினோத் கப்ரி கூறியும், பிரதீப் மேஹ்ரா என்ற அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்தார். மெக்டொனால்ட்ஸில் வேலை பார்க்கும் பிரதீப், தனது வீட்டில் இருந்து பணிக்கு தினமும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியபடி செல்கிறார். ராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் ஓடியபடி செல்வதாகவும், பகல் நேரங்களில் வேலை பார்ப்பதால் ஓடி பயிற்சி எடுக்க நேரம் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார். உணவு உண்ண வருமாறு வினோத் கப்ரி அழைப்பு விடுத்தும், மறுத்த இளைஞர் தனக்காக சகோதரர் பசியோடு காத்திருப்பதாக கூறி தன்னுடைய ஓட்டத்தை வேகப்படுத்தினார். இளைஞரின் செயலால் நெகிழ்ந்த வினோத் கப்ரி அவருடன் உரையாடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார். பிரதீப் மேஹ்ராவின் தாய் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக உரையாடலில் பிரதீப் மேஹ்ரா கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்