பெகாசஸ் விவகாரம் - இன்று தீர்ப்பு: பெகாசஸை பயன்படுத்தியதா மத்திய அரசு?

பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2021-10-27 02:58 GMT
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் விசாரணையின் போது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பதை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க தயாராக உள்ளதாகவும், அந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெகசாஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30  மணிக்கு தீர்ப்பு கூறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்