அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை - டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கான காரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Update: 2021-10-15 03:58 GMT
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளான கச்சா எண்ணெயின் தேவைகளில் 80 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.


இறக்குமதிகளுக்கு டாலர்கள் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்பதால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தால், இறக்குமதி பொருட்கள் விலை அதிகரிக்கும்.


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பர் 15இல் 73 ரூபாய் 44 பைசாவாக இருந்து, தற்போது 75 ரூபாய் 28 பைசாவாக, ஒரு ரூபாய் 84 பைசா
அளவுக்கு குறைந்துள்ளது.


சர்வதேச சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் ஒன்றுக்கு செப்டம்பர் 20இல் 73.07 டாலர்களாக இருந்து தற்போது 83.98 டாலர்களாக, 9 டாலர்கள் அளவுக்கு அதிகரித்துளது.

இதன் காரணமாக, பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் செப்டம்பர் 14இல் 98 ரூபாய் 96 பைசாவில் இருந்து தற்போது 102 ரூபாய் 10 பைசாவாக 3 ரூபாய் அளவுக்கு
அதிகரித்துள்ளது.


கொரோனா பாதிப்புகளில் இருந்து உலகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதால், உலகெங்கும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது.


இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்றும், அதன் விளைவாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்