குடிநீரில் கழிவு நீர் கலப்பு? - தண்ணீர் குடித்த 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் பொதுக் குழாயில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் பொதுக் குழாயில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த ஆறு பேர் உயிரிழந்தனர். விஜயநகர் மாவட்டம் மகரப்பி கிராமத்தில், ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய புதிய குழாய் பதிக்கும் போது, வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்
கலந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனிக்காத அதிகாரிகள், தண்ணீரை கிராம மக்களுக்கு விநியோகம் செய்ததாக தெரிகிறது. இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஆறு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரசின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.