அகிலேஷ் யாதவ் தடுக்கப்பட்ட விவகாரம்; "மோதலின் போது போலீசார் காயமடைந்தனர்" - மீரட் எஸ்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மோதலின் போது போலீசார் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக மீரட் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-05 08:44 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மோதலின் போது போலீசார் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக மீரட் எஸ்.பி. தெரிவித்துள்ளார். விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், போலீசாரால் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, சமாஜ்வாதி கட்சியினர் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், விவசாயிகள் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியினர் தாக்கப்பட்டனர். பெரும் மோதல் வெடித்த நிலையில், கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தில், ஏராளமான போலீசார் காயமடைந்துள்ளதாக மீரட் எஸ்.பி. வினீத் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்