அரசியல் கட்சி தொடங்கிய நாட்டு மருத்துவர்: ஆந்திர அரசியல் களத்தில் புது திருப்பம்

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டு மருத்துவர் ஆனந்தயா புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Update: 2021-09-30 03:51 GMT

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தயா நாட்டு மருத்துவம் மூலம் பல்வேறு நோயாளிகளை குணப்படுத்தி பிரபலம் அடைந்தார். தான் தயாரிக்கும் நாட்டு மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என அவர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், பரிசோதனைக்கு பின் வழங்கலாம் என அரசு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, ஆனந்தய்யாவிடம் மருந்துகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள், கிருஷ்ணா பட்டினம் கிராமம் நோக்கி படையெடுத்தனர். இதனால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் என கூறி, அம்மாநில அரசு தடை விதித்தது. இதனால் அரசின் மீது அதிருப்தியில் இருந்த ஆனந்தய்யா பிற்படுத்தப்பட்டோர் நலக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய அளவில் இந்த கட்சி உருவாக உள்ளதாகவும், இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்