மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு
மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு
மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் - கம்பி எண்ணுவதாக மோடி பேச்சு
உத்திரபிரதேச மக்களை மிரட்டி பணம் பறித்த மாஃபியாக்கள் கம்பி எண்ணி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அமைக்கப்படும் மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று அடிக்கல் நாட்டினார்.நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி ராஜா மகேந்திர பிரதாப் சிங் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டது மட்டுமின்றி இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு அடித்தளமிட்டவர் என புகழ்ந்தார்.இந்தியாவில் நவீன கையெறி குண்டுகள், போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் நவீன துப்பாக்கிகள் போன்ற பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக கூறிய மோடி,உலகிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளர் என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார்.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்திரப்பிரதேச மாநில வளர்ச்சியில் பங்காற்றி வருவதாக கூறினார்.மேலும், ஒரு காலத்தில் உத்தரபிரதேச அரசு மாஃபியாக்களால் நடத்தப்பட்டு வந்ததாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்தவர்கள் தற்பொழுது கம்பி எண்ணுவதாகவும் தெரிவித்தார்.