சமையலறை வேலை பெண்களுக்கு மட்டும்தானா? - எச்சரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
சமையலறை வேலை பெண்களுக்குரியது என்ற பொது கருத்து மாற வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சமையலறை வேலை பெண்களுக்குரியது என்ற பொது கருத்து மாற வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் பெண்களுக்கு ஆதரவான 'சமம்' எனும் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து பேசிய பினராயி விஜயன், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளில் ஒன்றான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து தொடங்குவதாக தெரிவித்தார். சமூகத்தில் வகுப்புவாத சக்திகள் பெண்களை சமையலறைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்வதாக எச்சரித்தார்.