கைதிகள் விடுதலை; மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - உச்சநீதிமன்றம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-04 02:13 GMT
மரண தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு 
உள்ளது என  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, மற்றும் போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு  தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு குற்றவியல் நடைமுறை  சட்டப்படி உண்டு என தெரிவித்துள்ளது. மேலும் ஒருவேளை 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்காதவர்களை, மாநில அரசின் பரிந்துரையின் பேரில், அவர்களை விடுவிக்கவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், தண்டனையை குறைக்கவும் அதிகாரம் மாநில ஆளுநர்களுக்கு உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்