கனமழையின் கோரத் தாண்டவம் - மிகவும் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்கள்
கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. எங்கு திரும்பினாலும்... தேங்கி நிற்கும் வெள்ளநீர்... தண்ணீரில் மூழ்கி போன வீடுகள்... கோயிலின் கோபுரம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது.... தோண்ட தோண்ட மீட்கப்பட்டு வரும் சடலங்கள் ஒருபுறம்... தத்தளித்து கொண்டிருக்கும் மக்களை காக்க விரையும் படகுகள் இன்னொரு புறம்... என வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, மகாராஷ்டிரா. குறிப்பாக கொங்கன் பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 73 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஷாங்லி மாவட்டத்தில் உள்ள வால்வா எனும் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்...