கேரளாவில் சிகா எனும் புதிய வகை வைரஸ் - ஒரு பெண் பாதிப்பு

கேரளாவில் சிகா எனும் புதிய வகை வைரஸ், ஒரு பெண்ணை பாதித்து உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-09 01:51 GMT
கேரளாவில் சிகா எனும் புதிய வகை வைரஸ், ஒரு பெண்ணை பாதித்து உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் தேதி 24 வயதான கர்ப்பிணி ஒருவர், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளோடு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, புனே ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரி அனுப்பப்பட்டது. அதன் முடிவில் அந்த பெண்ணுக்கு சிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 13 பேருக்கு சிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்