வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு - பாபாராம்தேவ்க்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
அலோபதி சிகிச்சை குறித்து பேசிய வீடியோ மற்றும் எழுத்துப் படியை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலோபதி சிகிச்சை குறித்து பேசிய வீடியோ மற்றும் எழுத்துப் படியை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலோபதி சிகிச்சை குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கத்தால் பீகார், சத்தீஸ்கரில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வழக்குகளுக்கு தடை கோரி பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்து, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.