கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி உயிரிழப்பு - ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர் மீது தாக்குதல்
அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளி இறந்ததால் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து பாதிப்பிற்குள்ளான மருத்துவர் சியூஜ் குமார் சேனாபதி கூறும்போது, நோயாளி காலையிலிருந்து சிறுநீர் கழிக்கவில்லை என உறவினர்கள் கூறியதால், பார்க்க சென்ற போது, அவர் இறந்திருப்பதைக் கண்டறிந்து, உறவினர்களிடம் கூறியதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சரமாரியாக மருத்துவரைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.