கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி

கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி

Update: 2021-05-05 02:53 GMT
கொரோனாவை தடுப்பு பணிகளில், இந்திய விமானப்டை விமானங்கள், 360 மணி நேரத்தை கடந்து சேவையாற்றி வருவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியவண்ணம் உள்ளன. இதனிடையே, வான்வழியே விரைவாக கொண்டுசெல்ல இந்திய விமானப்படை முன்வந்தது. அதன்படி தற்போது வரை, ஆக்சிஜன் நிரப்புவதற்காக 180 காலி டேங்கர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை,  எடுத்து சென்று உரிய நேரத்தில் சேர்த்துள்ளதாக இந்திய விமானப்டை தெரிவத்துள்ளது.  இதுவரை சுமார் 360 மணி நேரங்களை கடந்து, மருத்துவ உபகரணங்களுடன், இந்திய விமானப்படை விமானம் பறந்து வருவதாகவும் இந்திய விமானப்டை தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்