பகவத் கீதை மின்னணு பதிப்பு வெளியீடு

மின் நூல் பதிப்புகள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-11 11:06 GMT
மின் நூல் பதிப்புகள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக வெளியிட்டார்.பின்னர் பேசிய அவர், மின் நூல் பதிப்புகள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதாக கூறினார்.கீதையில் உள்ள கருத்துக்கள், பன்முகத்தன்மையும், நெகிழ்வுத்தன்மையும் கொண்டது என்றும்,நம்மை சிந்திக்க வைத்து, கேள்வி கேட்க தூண்டுவதாகவும், மனதை தெளிவுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.மேலும், நோய் தொற்றுக்கு எதிராக உலகமே கடும் போரில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், கீதை நமக்கு வழிகாட்டுவதாக தெரிவித்தார்.தற்சார்பு திட்டம் மூலம் செல்வம் மற்றும் மதிப்பை உருவாக்குவது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்காகவும் தான் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.மேலும், உலகிற்கு தேவையான மருந்துகளை வழங்க, தன்னால் முடிந்த அனைத்தையும் இந்தியா செய்ததாகவும்,இன்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் செல்வதாகவும் தெரிவித்தார்..
Tags:    

மேலும் செய்திகள்