கொரோனா பரவல் எதிரொலி - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து

கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-12-15 07:23 GMT
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக பத்து நாள் நடைபெற்றது அதில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா பரவலால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவை நடத்தப்பட்ட போதிலும், இரு அவைகளையும் சேர்ந்த 25 எம்.பி.க்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மழைக்கால கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையை எடுத்துக் கூறி நாடாளுமன்ற கூட்டத் தொடரை விரைந்து கூட்ட, காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதில் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, குளிர்க்கால கூட்டத் தொடரை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவிக்காத நிலையில், இந்தாண்டு குளிர்க்கால கூட்டத் தொடரை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கலாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்