10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49" - "புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்"
இ.ஓ.எஸ். 01 என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோள் உட்பட 10 செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து, மாலை 3.12 மணிக்கு ஏவப்பட்டது. நவீனரக இஓஎஸ்- 01 செயற்கைகோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான ஒரு செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என, 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டன. இஸ்ரோவால் ஏவப்பட்ட இந்த பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் செலுத்தப்பட்ட 10 செயற்கைகோள்களும், திட்டமிட்டப்படி வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.