2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுவில் அதிரடி - மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
ஒரு வழக்கில் எவ்வளவு விசாரணை வேண்டும் என்பதை நீதிபதியே முடிவு செய்யமுடியும் என 2ஜி விவகாரத்தை விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், அவசரமாக விசாரிக்கக் கோருவது ஏன் என்றும், சிறையில் வாடும் 10 ஆயிரம் கைதிகளுக்கு உரிமை இல்லையா என்றும் எதிர்தரப்பு வாதிட்டது. 2ஜி மேல் முறையீட்டில் பொதுநலன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மனுதாரர் தரப்பு, விரைவாக விசாரிக்க கோருவதன் பொதுநலனை புரிந்து கொள்ள வேண்டும் என்றது. இதைக் கேட்ட நீதிபதி, ஒரு வழக்கில் எவ்வளவு விசாரணை வேண்டும் என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும், இந்த வழக்கில் செலவிடப்பட்ட நீதிமன்ற நேரம் வீணாகிவிட கூடாது என்றும் கூறினார். வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.