மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் - மத்தியமைச்சர் ரமேஷ் போக்ரியால் வீடியோ பதிவு

ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில முதல்வர்கள் செய்யமாறு மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2020-09-01 03:12 GMT
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் , அவர்களின் எதிர்காலத்திற்காக நம் அனைவரின் கூட்டு முயற்சி தேவை எனவும் தெரிவித்துள்ளார்.   மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வின் போது எந்த விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணி  நிலவரப்படி ஜே.இ.இ.யில் 8 புள்ளி 58 லட்சம் பேரில் சுமார் 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் தேர்வு அனுமதி அட்டைகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 15 புள்ளி 97 லட்சம் பேரில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்