திவாலான நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகள் பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் - மத்திய அரசு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திவாலான டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தற்போது பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-15 13:03 GMT
திவாலான டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தற்போது பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  ஆர் காம், ஏர்செல் மற்றும் வீடியோகான் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் திவாலானதையடுத்து , அவற்றின் வசம் இருந்த ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட  நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மூலம் பெற்று பயன்படுத்தி வருகின்றன. ஆர்.காம் நிறுவனத்திடம் இருந்த அலைகற்றைகளில் சுமார் 38 சதவீதத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்