காணொலி மூலம் இரண்டு கட்டமாக ஆலோசனை : கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி பங்கீடு தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக காணொலி மூலம் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், 17ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்டை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரயில் மற்றும் விமான சேவைகள், பள்ளி, கல்லூரிகள் திறப்பும் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.