பெட்ரோல் மீதான வரி உயர்வு - ப.சிதம்பரம் விமர்சனம்
பெட்ரோல் மீதான வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பெட்ரோல் மீதான வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துக்கிறார்கள், ஏனென்றால் மத்திய அரசு ஏழை, அதற்கு வரிப்பணம் வேண்டும் என்றும், பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள், ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள் அவர்களுக்கு பணம் வேண்டும் எனவும் சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தான் பணக்காரர்கள், அவர்கள் என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள் என மத்திய அரசு நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்