6 வங்கிகளில் ரூ.411 கோடி நிதி மோசடி - தொழிலதிபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு

வங்கிகளில் 411 கோடி ரூபாய் கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் மீது 4 ஆண்டுகளுக்கு பின், ஸ்டேட் வங்கி புகார் அளித்துள்ளது.

Update: 2020-05-10 07:44 GMT
பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துவந்த டெல்லியை சேர்ந்த ராம்தேவ் என்கிற நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டேட் வங்கியிடம் 173 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. கனரா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஐடிபிஐ, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா என பல வங்கிகளிலும் மொத்தமாக 411 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு அளித்த கடனை, 2016 ஆண்டு ஜனவரி மாதத்தில் வாரக்கடனாக ஸ்டேட் வங்கி அறிவித்தது. இந்த நிலையில், கடனை திருப்பி செலுத்தவில்லை என அனைத்து வங்கிகளும் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ராம்தேவ் நிறுவன ஆலைக்கு என்றபோது, அங்கு அனைத்து இயந்திரங்களும் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கடந்த பிப்ரவரியில், எஸ்பிஐ வங்கி அளித்த புகாரில் விசாரணை நடத்திய  சிபிஐ அதிகாரிகள், அந்த நிறுவனத்தின்  இயக்குநர்கள் வெளிநாடு தப்பி சென்றதை கண்டுபிடித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிபிஐ அதிகாரிகள் சோதனைக்கு செல்ல முடியாத நிலையில், ராம்தேவ் நிறுவனத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடிய பின், ஸ்டேட் வங்கி புகார் அளித்த  விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்