ஆந்திராவில் 75% விலை உயர்வுடன் மதுவிற்பனை - ஆந்திரா மாநில அரசு அதிரடி அறிவிப்பு
ஆந்திராவில் 75 சதவீத விலை உயர்வுடன் மதுவிற்பனை செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சில நிபந்தனைகளுடன் நேற்று ஆந்திராவில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபான பாட்டில்களில் உள்ள விலையை விட 25 சதவீதம் அதிகம் வைத்து விற்பனை செய்ய அரசு பரிந்துரை செய்தது. இதனைப் பொருட்படுத்தாமல் இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் வரிசையில் நின்று, ஏராளமானோர் மதுபானங்களை வாங்கி சென்றனர்.இந்த நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல், மதுபான விற்பனையில் 50 சதவீதம் விலையேற்றம் செய்து, மொத்தம் 75 சதவீதம் ஏற்றத்துடன் மதுபானங்களை விற்பனை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மதுபானத்திற்கு அடிமையான அனைவரையும், அந்த பழக்கத்திலிருந்து வெளியே அழைத்து வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால், மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.