டெல்லி வன்முறை - பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸாரும், துணை ராணுவ படையினரும் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-02-26 06:56 GMT
டெல்லியில் குடியுரிமை சட்டம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது...

கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியின் பாபர்பூர், மௌஜ்பூர் பகுதிகளில் துணை ராணுவ படையினர் ரோந்து பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடி அணிவகுப்பும் நடத்தி வருகின்றனர். டெல்லி காவல்துறை மற்றும்  துணை ராணுவ படைகளின் உயரதிகாரிகள் முகாமிட்டு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்