"எதிர்கருத்துக்களை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்கு சமம்" - உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
எதிர்கருத்துக்களை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்கு சமம் என எச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எச்சரித்துள்ளார்.
எதிர்கருத்துக்களை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்கு சமம் என எச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எச்சரித்துள்ளார். கருத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் தேசத் துரோகிகளாக சித்தரிப்பது மிகப்பெரும் ஆபத்தானது என எச்சரித்துள்ள அவர், ஜனநாயகத்தின் பாதுகாப்பு வாழ்வே அதுதான் என தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய டி.ஒய்.சந்திரசூட், பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மதிப்புகள் மற்றும் அடையாளங்களின் மீது ஏகபோகம் கொண்டாட முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.