கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தம் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க கோரிக்கை

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 900 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2020-02-03 10:32 GMT
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 900 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரானது, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்