தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை - நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் புதிய மனு தாக்கல்
நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும்
பிப்ரவரி 1 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்
பிப்ரவரி 1-ஆம் தேதி நிறைவேற்றபடவுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த
மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.