"குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள், முதலமைச்சரை பெருமைப்படுத்தவே வாசிக்கின்றேன்" - கேரள ஆளுநர் தகவல்
முதலமைச்சருக்கு மரியாதை செய்வதற்காக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசின் கருத்துக்களை வாசிக்கிறேன் என கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளார்.
முதலமைச்சருக்கு மரியாதை செய்வதற்காக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசின் கருத்துக்களை வாசிக்கிறேன் என கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளார். கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமது கான், தமது உரையில் இடம் பெற்றுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பகுதி அரசின் கொள்கை முடிவு மற்றும் திட்டத்திற்கு உட்பட்டது இல்லை என்ற நிலையிலும், தற்போது வாசிப்பதாக கூறி அந்த பகுதியை வாசித்தார்.