ஜம்மு, காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை எடுத்துச் சொல்ல மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீர் செல்கிறது.

Update: 2020-01-16 20:31 GMT
ஜம்மு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக மத்திய அமைச்சர்கள் குழு நாளை காஷ்மீர் செல்கிறது. வரும் 23 ஆம் தேதி வரை, 36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 இடங்களுக்கு சென்று மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் மற்றும்  சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளனர். இந்த குழுவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அர்ஜுன் ராம் மேக்வால், ரவிசங்கர் பிரசாத், பியூஷ்கோயல்,  ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, கிரன் ரிஜூஜு உள்ளிட்ட 36 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 

ஜம்மு, காஷ்மீருக்கு 36 அமைச்சர்கள் குழு பயணம் - காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம்

இந்த பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்ச்சித்துள்ளது.  இதுதொடர்பாக பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், எல்லாம் நலமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வரும் நிலையில், 36 பேர்  செல்ல வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை ஏன் அனுமதிப்பது இல்லை என்றும் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்