"கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல்" - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கருத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புகார் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புகார் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதே சமயம் இது குறித்து தமக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த தகவல் பத்திரிகைகள் மூலம் தான், தாம் அறிந்து கொண்டதாகவும், தாம் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.