"குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்" - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டம்
ஆந்திராவில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் பேசிய, அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, "தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்ப்பதாகவும், ஆந்திராவில் அமல்படுத்த போவதில்லை எனவும் தெரிவித்தார். சிறுபான்மை சமூக தலைவர்கள் சிலர், தன்னை சந்தித்து, ஆந்திர அரசின் நிலையை தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அவர்களிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அரசு ஆதரிக்காது என்று கூறியதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.