வள்ளியூர்: 10ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - உறவினர்கள், தோழிகள் வீடுகளில் விசாரணை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2019-12-16 09:25 GMT
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வள்ளியூர் சந்தை தெருவை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அவரது தந்தை திட்டியதால், தோழியையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இதனிடையே இருவரும் வீடு திரும்பாத நிலையில், காவல்நிலையத்தில், அவர்களது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாணவிகளின் உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் விசாரணை நடத்திய போலீசார், மெயின்ரோட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்