மாணவர்கள் தண்ணீர் அருந்த இடைவேளை அமல் : புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்த வசதியாக நான்கு முறை "தண்ணீர் இடைவேளை" விடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்த வசதியாக நான்கு முறை "தண்ணீர் இடைவேளை" விடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குழந்தைகள் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் பாதிக்கப்படுவதாக பெற்றோரும், மருத்துவர்களும் புகார் தெரிவிப்பதால், பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்த வசதியாக நான்கு முறை "வாட்டர் பெல்" அடிக்க புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.