"பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
உலக அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உலக வங்கி மற்றும் ஐஎம்எப் கூட்டத்தில் உலக பொருளாதார மந்த நிலைக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மந்த நிலை நீண்ட காலமாக தொடர்வது குறித்து சில நாட்டு பிரதிநிதிகள் வேதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். வளர்ச்சிக்கு உகந்த பொருளாதார சூழல் உருவாக்கப்படும் என்று தெரிவித்த அவர், நிதி பற்றாக்குறை 2019- 20-ஆம் ஆண்டுகளில் 3 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார். இது முந்தைய ஆண்டில் 3 புள்ளி 4 சதவீதமாக இருந்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020 ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.